#சென்னை வாசிகளே மறந்துவிடாதீர்., நாளை முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடு.!  - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தென்னக ரயில்வே ஒரு கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்க வேண்டுமென்றால், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே மின்சார ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை நாளை (10ஆம் தேதி திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மின்சார ரயிலில் 50 சில இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.. அப்படி வீதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai train new corona rule


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->