சென்னை டாஸ்மாக் வாடிக்கையாளர்களே உஷார் - காவல்துறை விடுத்த கடும் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் கடை பாரில் மது குடித்துவிட்டு, போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையெனில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் ஏலத்திற்கு விடப்படும் என்று, சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. அதன்படி, போக்குவரத்து போலீசார் புதிய அபராதம் விதித்து வருகின்றனர். 

குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் 10,000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அபராத தொகையை செலுத்தாமல் பல வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதை தடுக்கவும், மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். 

அதன்படி, அபராத தொகையை செலுத்த நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்படும்.

நீதிமன்ற வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்தவில்லை எனில், அவரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.

ஏற்கனவே, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மது போதையில் வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட உள்ளது என்றும் சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Traffic police warning 2022


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->