குடிச்சிருக்கேன், ஆனா ஊதமாட்டேன் - காவல் அதிகாரிகளின் பொறுமையை மணிக்கணக்காக சோதித்த அரை போதை கிராக்.! - Seithipunal
Seithipunal


நள்ளிரவு நேரத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த இளைஞர், ஆல்கஹால் அளவை கண்டறியும் கருவியை வாயில் வைத்து ஊத மாட்டேன் என பல மணி நேரம் அடம்பிடித்து அட்டகாசம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரங்களில் பைக் ரேஸ் மற்றும் மது போதையில் வரும் வாகனங்களை கண்காணிக்க, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எழும்பூரிலிருந்து மெரினா கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை காவல்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். 

வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரிடம், மதுவை அளவை கண்டறியும் இயந்திரத்தை காண்பித்து, அதில் உள்ள குழாயில் வாய் வைத்து ஊதுமாறு காவல் அதிகாரி கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த இளைஞர், நான் மது குடித்து இருப்பது உண்மைதான் என்றும், தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும், அந்த குழாயில் வாயை வைத்து ஊத மாட்டேன் என்று தெரிவிக்கிறார். 

கருவியில் ஊதிவிட்டு நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம் என்று காவல்துறையினர் அறிவுரை கூறியும், அந்த இளைஞர் கேட்காமல் இருக்கிறார். மேலும், போதையில் நான் யார் தெரியுமா? தனக்கு யாரையெல்லாம் தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா? என வாய்சாவுடால் விட ஆரம்பித்துள்ளார். சுமார் இரண்டுமணிநேரம் இந்த போராட்டம் நடந்துள்ளது. 

ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாகி போன காவல்துறையினர், போக்குவரத்து ஆய்வாளருக்கு போனில் அழைத்து விஷயத்தைக் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரி முன்பு கையை கட்டி பவ்யமாக போதை ஆசாமி நடித்த நிலையில், காவல் ஆய்வாளர் இளைஞன் போதையில் இருக்கிறான் என்று தெரிந்தும் சாலை விதிமுறைகளை கூறி மது அளவை சோதனை செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். 

ஆனால், அவரிடமும் அதே புராணத்தை அந்த இளைஞர் பாடிய நிலையில், பொறுமையை சோதித்த குடிகாரனின் செயலால் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் துறையினர் செய்வதறியாது திகைக்கவே, இறுதியில் மேற்கொண்ட சோதனையில் 200 மில்லி கிராம் மது அளவை காண்பித்துள்ளது. 

விசாரணையில், அந்த இளைஞர் ஓட்டுனர் உரிமமும் கைவசம் வைத்திருக்கவில்லை என்று கூறவே, உச்சகட்ட கொந்தளிப்பிற்கு உள்ளாகிய காவல் அதிகாரிகள் எந்த விதமான சலனமும் செய்யாமல் வாகனத்தை பறிமுதல் செய்து, நாளை காவல் நிலையத்திற்கு வருமாறு அறிவுரை கூறி நடைபயணமாக இளைஞனை அனுப்பி வைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Traffic Police Drunken Culpirt Make Atrocity 15 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->