ஏன் திமுகவுக்கு ஓட்டு போடல?.. பெண்கள் மீது தாக்குதல் நடத்தி கற்பழிப்பு, கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவெற்றியூர் பாலகைக்கோட்டை பகுதியில் 200 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அதிமுக கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வாக்களித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு வந்த திமுக ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு ஏன் நீங்கள் வாக்களித்தீர்கள்? திமுகவிற்கு ஏன் வாக்களிக்கவில்லை? என்று கூறி பெண்களிடம் அவதூறாக பேசி தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருவருக்குள் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்துபோன பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் அளிக்கவே, விசாரணைக்கு வந்த காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே திமுகவினர் பொதுமக்களை தாக்கியுள்ளனர். இதனையடுத்து பயந்துபோன 60 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களின் உறவினர்களின் இல்லத்திற்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி பெண்மணி தெரிவிக்கையில், " திமுகவினர் மொத்தமாக வந்து பெண்கள் என்றும் பாராது அவதூறாக பேசினார்கள். திமுகவிற்கு வாக்களிக்க வில்லை என்பதால், உங்களை என்ன வேண்டும் என்றாலும் செய்வோம் என்று அவதூறாக பேசுகிறார்கள். 

எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளார்கள். நான் என்ன செய்வது, அவர்களுக்கும், எனக்கும் ஏதேனும் ஒரு துயரம் நிகழ்ந்தால் என்ன செய்வது?. இதனால் உறவினர்களின் வீட்டிற்கு நாங்கள் செல்கிறோம் " என்று தெரிவித்தார்.

திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் பாகுபாடு இன்றி மக்களுக்காக உழைப்பேன் என்று கூறுகிறார், சென்னை மாநகர காவல் ஆணையர் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், மக்களை மிரட்டுதல் போன்றவற்றில் யாரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுகிறார். இப்படியான சூழலில் பெண்களுக்கு கற்பழிப்பு, கொலை மிரட்டல் திமுகவினர் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Thiruvotriyur DMK Supporters Torture Public 9 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->