முட்டாள் கணவன் மதுவுக்கு அடிமை.. சண்டையிட்டு பணம் வாங்கி சரக்கு... பிள்ளைகளுடன் தாய் விபரீத முடிவால் பறிபோன 3 உயிர்.! - Seithipunal
Seithipunal


சண்டையிட்டு மதுபானம் அருந்த பணம் வாங்கி சென்ற கணவனால் மனமுடைந்த பெண்மணி பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் உள்ள திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகர் பகுதியை சார்ந்தவர் ரமேஷ். இவர் வர்ணம்பூசும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌரி (வயது 24). இந்த தம்பதிகளுக்கு தீக்சிதா என்ற 3 வயது மகளும், அஸ்வின் என்ற ஒன்றரை வயதுடைய மகனும் உள்ளனர். ரமேஷ் அவ்வப்போது பணிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதும், கிடைத்த பணத்தில் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வது என இருந்து வந்துள்ளான். மேலும், அவ்வப்போது மனைவியை மிரட்டி பணம் வாங்கிச்சென்றும் மதுபானம் அருந்தி வந்துள்ளான். 

இந்நிலையில், சமீபத்தில் வீட்டின் கட்டிட பணிகளுக்காக கௌரி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் சீட்டுப்பணத்தை கேட்டு ரமேஷ் தொந்தரவு செய்து வந்துள்ளான். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக காலையிலேயே ரமேஷ் தனது மனைவி கௌரியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளான். இறுதியில், அவனின் தொந்தரவு தாளாது பெண்மணி பணம் கொடுத்ததும், அதனை வாங்கி மதுஅருந்த சென்றுள்ளான். 

வீட்டில் இருந்த கௌரி மிகுந்த மன விரக்தியுடன் இருந்த நிலையில், குடிகார கணவனுடன் வாழ்வதை விட குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்த கௌரி, வீட்டின் உள்புறமாக தாளிட்டு வீட்டின் மேற்கூரையில் உள்ள இரும்புக்குழாயில் தனது மகள் மற்றும் மகனை தனித்தனியாக புடவையில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். 

குழந்தைகள் இருவரும் துடிதுடித்து உயிரிழக்க, அவர்களின் மரணத்தை உறுதி செய்த பின்னர் தானும் மற்றொரு புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருநின்றவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வந்தனர். இந்த விசாரணையில், ரமேஷின் மதுப்பழக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட தகராறு, இறுதியில் மனைவியிடம் சண்டையிட்டு மதுபானம் அருந்த பணம் வாங்கி சென்றது உறுதியானதால், தலைமறைவான ரமேஷை தேடி வந்தனர்.

நேற்று ரமேஷை கைது செய்த காவல் துறையினர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். குடும்பங்களை சீரழிக்கும் மதுபான கடைகளை மூடக்கூறி தமிழகத்தில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், இன்று வரை அதற்கு விடியலும், இலை துளிராமலும் இருப்பது தான் சாபக்கேடோ?.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Thirunindravur Woman Suicide with Children due to Husband Audit Liquor Alcohol


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->