திருட்டு நகைகளை காதலிக்கு போட்டு பார்த்து மகிழ்ந்த திருடன்.. மொத்தத்தையும் தூக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தி.நகர் பகுதியை சார்ந்த ராஜேந்திர பாபு என்பவருக்கு சொந்தமாக ஜுவல்லரி கடை உள்ளது. உத்தம் ஜுவல்லரி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இக்கடையில், கடந்த 22 ஆம் தேதி 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ மற்றும் 125 கிராம் தங்கம் கலந்த வைர நகைகள், அரைகிலோ தங்கக்கட்டி மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக மாம்பலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சைபர் கிரைம் காவல் துறையினரின் உதவியுடன் இரவு நேரத்தில் வந்த அழைப்புகள் குறித்து சோதனை செய்ததில், திருவள்ளூர் பகுதியை சார்ந்த கார்த்திக் என்பவரின் அலைபேசி சிக்கியுள்ளது. 

இதனையடுத்து கார்த்திகை தேடி தனிப்படை செல்கையில், அவர் மாயமாகி இருந்துள்ளார். பின்னர் அவரது காதலியான உமா மகேஸ்வரி என்ற பெண்மணியை பிடித்து விசாரணை செய்ததில், கார்த்திக் அவரது நண்பரான கோடம்பாக்கம் பகுதியை சார்ந்த மார்க்கெட் சுரேஷ் என்ற நபருடன் கடந்த 21 ஆம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சுரேஷின் இல்லத்திற்கு தனிப்படை காவல் துறையினர் சென்ற போது அவரையும் காணவில்லை. முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இருவரும் திருட்டு தொழில் மூலமாக பழக்கமானதும், சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஒருசேர திருட்டு தொழில் செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. 

சுமார் நான்கு நாட்கள் தீவிர தேடலுக்கு பின்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் இரயில் நிலையம் அருகே சுரேஷை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த 7 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. இதனைப்போன்று 5 கிலோ வெள்ளி நகைகள் கார்த்திக்கின் காதலியிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இருவரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai T Nagar Robbery police arrest Main Culprit investigation Process going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->