சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா வார்டு அவல நிலை.. வைரலாகும் காணொளி..!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 5 மருத்துவமனைகளில் இருந்து முக்கிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஸ்டாண்லி மருத்துவமனையும் முக்கிய மருத்துவமனையாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், ஸ்டாண்லி மருத்துவமனையில் கொரோனா வார்டு படுக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பெண்ணொருவர் பேசும் காணொளி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

இது குறித்த வீடியோவில், " எனது பெயர் சோபியா. நான் கொரோனா பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்துள்ளேன். எனக்கு கொரோனா உறுதியானது என்று கூறி, ஆறாவது மாடியில் அனுமதி செய்துள்ளனர். 

இங்கு கொரோனா வார்டு மிகவும் மோசமாக இருக்கிறது. பல நோயாளிகள் இருக்கின்றனர். ஆனால், சுத்தம் என்பது இல்லை. மூச்சு திணறுகிறது. மருத்துவமனை எப்படி இருக்கிறது என்பதை நீங்களும் பாருங்கள் " என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Stanley Hospital Corona Ward shame condition video trending


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->