செம்மஞ்சேரியை தொடர்ந்து பல ஆக்கிரமிப்பு நிலங்கள்.. அதிர்ச்சியில் நிலத்திருட்டு கல்வி தந்தைகள்.! - Seithipunal
Seithipunal


செம்மஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வந்த ஜேப்பியர் குழுமத்தின் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ. 2,000 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் அரசு நிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இந்த விஷயத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்துவந்த ஜேப்பியர், அவரது மறைவிற்குப் பின்னர் பல நூறு ஏக்கர் நிலங்களில் பிரம்மாண்டமான பொறியியல் கல்லூரிகளை நிறுவி, தன்னை கல்வித்தந்தை அடையாளப்படுத்திக் கொண்டார். ஜேப்பியரின் மறைவுக்கு பின்னர் அவரது கல்லூரி நிர்வாகத்தை அவரது மகள்கள் பாகப்பிரிவினை செய்து கவனித்து வந்தனர். 

கடந்த 27 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட ஜெயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியை, ஜேப்பியாரின் மகள் ஜெஸ்ஸி பிரியா மேலாண் இயக்குனராக இருந்து கவனித்து வருகிறார். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்குவதற்கு விடுதி அமைப்பதற்காக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 91.04 ஏக்கர் அளவிலான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. 

இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கு கடந்த 2003 ஆம் வருடம் முதல் வருமான வரித்துறை சார்பில் சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், நீண்ட காலமாக இருந்து வந்த இந்த வழக்கு செங்கல்பட்டு செசன்சு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான உத்தரவையும் வழங்கியது. 

கல்லூரி வசமிருந்த 91.04 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மீட்கப்பட்டது.

இதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி என்றும், இந்த நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் கான்கிரீட் சுவர்கள் பொக்லைன் இயந்திரத்தால் மூலமாக அகற்றப்பட்டும் என்றும் அமைச்சர் அறிவித்தார். மேலும், விடுதியில் உள்ள மாணவிகளை மாற்று இடத்திற்கு அனுப்பி வைக்கவும் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசின் வளர்ச்சிக்கு ஏராளமான நிலங்கள் தேவைப்படுவதால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் அடுத்தடுத்து பாரபட்சமின்றி மீட்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்து இருக்கிறார். பல கடுமையான அழுத்தங்களை மீறி இந்த நிலத்தை மீட்டு இருப்பதாகவும், நாங்கள் நேர்மையாக செயல்படுகிறோம் என்பதை இது உணர்த்துகிறது என்றும் கூறினார். 

சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பின் கையில் இருக்கும் நிலையில், அதனையும் மீட்டெடுப்போம் என அமைச்சர் உறுதியளித்துள்ளதால், அரசு புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு தங்களை வள்ளலாக அடையப்படுத்திய பல கல்வித்தந்தையர்கள் கலங்கிப்போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Semmanjeri St Joseph Govt Land Occupy Recovered by Officials Full Details Updated


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->