சென்னையில் 15 லட்சத்தை வழிப்பறித்த திருடர்கள்.! விரட்டிய பொதுமக்கள்., தரமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பட்டப்பகலில் ரூ.15 லட்சத்தை திருடிச்செல்ல முயற்சி செய்த கொள்ளையனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். 

சென்னை ராயபுரம் ஆதம்தெருவைச்சார்ந்த சாகுல் ஹமீத் என்ற 29 வயதுடைய ஒரு நபர் செல்பேசி வியாபாரம் செய்து வந்தார். அதேபோல் பழைய நகைகளை வாங்கி விற்பது போன்றதையும் செய்து வந்தார். இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த எட்டாம் தேதி அன்று மதியவேளையில் சென்னை ராயப்பேட்டையில்.உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்-இல் சுமார் பதினைந்து லட்சம் பணத்தை செலுத்துவதற்கு சென்றுள்ளார். 

அப்போது எ.டி.எம்யின் அருகே இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை தாக்க தொடங்கியது. அதன் பின் ஹமீத் வைத்திருந்த பணத்தை பிடிங்கிச்சென்றுள்ளது. ஆனால், ஹமீத் அவர்களை விடாமல் பின் தொடர்ந்து விரட்டிச்சென்றுள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் அந்த கும்பலை விரட்டிசென்றனர். 

அப்போது பணத்தை வைத்திருந்த கொள்ளையன் ஒருவன் சிக்கிக்கொண்டான். பொதுமக்கள் அவனை ராயப்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து அவனிடமிருந்த பதினைந்து லட்சம் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் கைதான கொள்ளையனின் பெயர் விக்னேஷ் என்றும், கொட்டிவாக்கம் பகுதியை சார்ந்தவன் என்பதும், தெரியவந்துள்ளது. தப்பிச்சென்ற இரு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai robbers attack and caught by public


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->