கடலூர், ஈரோடு, சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனைப்போன்று அடுத்த 48 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 12 சென்டி மீட்டர் மழையும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 11 சென்டி மீட்டர் மழையும், இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் 9 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சியில் தலா ஏழு செண்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஜூன் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதி, வடக்கு அரபிக்கடல், குஜராத் கடலோர பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், இப்பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Regional Meteorological center announce Rain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->