17 மாவட்டங்கள் ஜில் ஜில்.. உற்சாகத்தில் தமிழக மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 8 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 4 சென்டி மீட்டர் மழையும், சேலம் மாவட்டம் ஏற்காடு, கரூர் மாவட்டம் பஞ்சம்பட்டி மற்றும் மயிலம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தார் பகுதிகளில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுவடைந்து மேற்குக் கடற்கரையை ஒட்டியுள்ள, வடக்கு திசையில் நகரும். இதன் காரணமாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில், லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் வரும் 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். 

இங்கு ஜூன் 4-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். மேலும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகம், கோவா கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 60 கிமீ வரை வீசக்கூடும். தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக சென்னையில் 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Regional Meteorological center announce 17 districts rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->