ஒருநாள் மழைக்கே நிரம்பிய சாலைகள்.. புயல் மழைக்கு என்ன ஆகும்?.. சென்னைக்கு ஏன் இந்நிலை?..! - Seithipunal
Seithipunal


இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், நேற்று ஒருநாள் இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வாகனங்களை மூழ்கடிக்கும் அளவிற்கு வெள்ளம் தேங்கி நின்றது. பல வீடுகள் புயல் மழை வெள்ளம் போல, தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது. 

காலையில் விடிந்ததும் விஷயம் மக்களுக்கு தெரியவரவே, இயல்பு வாழ்க்கையானது பெருமளவு பாதிக்கப்பட்டது. ஏற்கனவே 65 விழுக்காடு நீர் இருப்பை கொண்டுள்ள சோழவரம் ஏரி, தொடர்ந்து நிரம்பிக்கொண்டே வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மழை தொடர்ந்து வந்தால், முழுவதுமாக நிரம்பிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் குறித்த பல கேள்விகள் நம்மிடையே எழுகிறது. பொதுவாக பருவமழை காலங்களில் சாலைகளில் வெள்ளநீர் தேங்குவது, பின்னர் அதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவது இயல்பானது. 

ஏற்கனவே சென்னையில் இருந்த பல ஏரிகள் கட்டிடமாக மாற்றப்பட்டு, ஏரிக்கு செல்லும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு தண்ணீர் பாய இடமே இல்லாமல் போனது. தற்போது மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. 

பல வருடங்களுக்கு முன்னதாகவே இவை நிறைவு செய்யப்பட்டு இருந்தாலும், முன்னொரு காலத்தில் ஏற்படாத வெள்ளம் சென்னையில் தற்போது ஏற்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், பாதாள சாக்கடை பராமரிப்பு போன்றவை முறையாக செய்யப்பட்டு வந்தாலும், மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளம், இதனால் ஏற்படும் அடைப்புகளால் 30 விழுக்காடு பகுதிகளில் மட்டுமே நீர் தேங்க வாய்ப்புகள் உள்ளது. 

ஆனால், இன்று அதற்கு மாறாக எங்கும் வெள்ளம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது பருவமழையால் எதிர்பார்த்ததை விட அதிகளவு மழை பெய்து, இந்தியாவின் பல மாநிலங்களை வெள்ளத்தால் நிறைத்த நிலையில், இதே சூழல் தற்போது சென்னையிலும் ஏற்பட துவங்கியுள்ளது. வெள்ளம் வரும் முன்பு சுதாரித்து அணையை கட்டி மக்களையும், எதிர்காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவது போல, சென்னையில் தீவிர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் சென்னை வாசிகள் தப்பிக்க இயலும். 

ஆற்றுக்கு அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல, ஆற்றுக்கு நீர் வந்த வடிகால்கள் இருக்கும் பழைய புகைப்படங்களை பார்த்து, அதனையும் அகற்றினால் மட்டுமே சென்னை எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கும். மாறாக பெயரளவிற்கு நாம் இன்று செய்யும் வேலை, எதிர்கால தலைமுறை சென்னையை மழைக்காலங்களில் வெறுத்து ஒதுக்கி பிற ஊர்களை தேடி செல்லும் நிலை ஏற்பட்டாலும் அது சந்தேகத்திற்கு இல்லை என்பதே நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Rain Water Staggered in Roads Reason


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->