தீபாவளி அதுவுமா சென்னையில் சிக்கிய 348 பேர்.! வெளியான பரிதாப செய்தி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு அனுமதித்த 2 மணி நேரத்தில் மட்டும் மக்கள் பட்டாசு வெடித்து இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். 

தமிழகத்தில் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படவில்லை என்றாலும், நேற்றைய தீபாவளி பண்டிகையின் போது சுமார் 9 வீடுகள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் போது தீவிபத்துக்கு உள்ளாகின. இதில் யாருக்கும் உயிர் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில், சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டாசு விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

அதே சமயத்தில், நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 8 மாவட்டங்களில் ஒரு வழக்கும் பதிவாகவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், நெல்லை, திருப்பத்தூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், விருதுநகர், அரியலூர் மாவட்டங்களில் இதுவரை வழக்குப்பதிவு இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai polise case file for crackers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->