சார்.. அது என் ப்ரெண்டோட காரு சார்... டிடிஎப் வாசனை விடாமல் துரத்தும் காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


கோவையைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் டிடிஎப் வாசன் சில தினங்களுக்கு முன்பு கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஒருவரின் அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த பொழுது வாசனை காண வந்த 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதமும் டிடிஎப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். 

இது நிலையில் டிடிஎப் வாசன் இன்று வடபழனியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஒரு படத்தின் முன்னோட்ட காட்சியை காண நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்துள்ளார். இதனை கண்டுபிடித்த சென்னை போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து டிடிஎப் வாசன் பயணம் செய்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அந்த காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இது குறித்த தகவல் அறிந்த டிடிஎப் வாசன் காவல் நிலையத்திற்கு விரைந்தார். காவல்துறையினரிடம் "சார்... இது என்னோட கார் இல்ல சார்... என் பிரண்டோட கார் சார்.."என கூறியுள்ளார். மேலும் நம்பர் பிளேட் இருந்தால் ரசிகர்கள் பின் தொடர்வதால் நம்பர் பிளேட் கழட்டி வைத்ததாக விளக்கம் அளித்தார். போதிய விளக்கம் இல்லாத காரணத்தால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரே தன்னை வரவேற்பார்கள் என வீடியோ வெளியிட்ட டிடிஎப் வாசனை காவல் நிலையத்திற்கே வரவழைத்துள்ளது தமிழக காவல்துறை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai police seized car without number plate traveled by TTF Vasan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->