கேரட் பீர் தயாரித்து அமோக விற்பனை... அலேக்காக தூக்கிய காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் போதைக்காக கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் பல்வேறு போதைப் பொருட்களை தயாரிப்பது என்று பல உயிரிழப்புகளும் அரங்கேறி வந்தது. 

இந்த நிலையில், வட சென்னை பகுதியில் கேரட் பீர் புதிய போதை பானங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், திருவொற்றியூர் பகுதியில் கேரட் பீர் விற்பனை செய்யப்படுவதை அறிந்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், அப்பகுதியை சேர்ந்த சுகுமார் என்று 25 வயதுடைய இளைஞர் கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. 

அவரிடமிருந்து இரண்டு லிட்டர் கேரட் சாராயத்தையும் கைப்பற்றினர். மேலும், அலைபேசியில் யூடியூப் பார்த்து கேரட் ஜூஸ் மூலம் கேரட் பீர் தயாரித்து வந்ததாக வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai police arrest culprit to make carrot bear


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->