மீண்டும் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. கதறும் வாகன ஓட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலையில்லாமல் உயர்வையும், குறைவையும் சந்தித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும், விலை உயரும் போது ரூபாய் கணக்கிலும், குறையும் போது பைசா கணக்கிலும் குறைந்து வருகிறது.

கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் பெட்ரோல் டீசலின் விலையை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், உலகை ஆட்டி வைத்தவரும் கரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியிலான பிரச்சனையை சந்தித்தது. 

இதனால் கச்சா எண்ணெய்யை உலகளவில் வாங்க ஆட்கள் இல்லாமலும், ஊரடங்கு காரணமாக குறைந்த வாகன பயன்பாடுகளாலும் கச்சா எண்ணெய் பொருட்களான பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்தது. இந்தியாவில் மட்டும் விலை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. சென்னையில் கடந்த 34 நாட்களாக சென்னையில் ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர தொடங்கியது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 48 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 77.08 ரூபாயாகவும், டீசல் 49 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 69.74 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Petrol diesel price 9 June 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->