கேரள தங்கக்கடத்தல் விவகாரம்.. சென்னையில் என்.ஐ.ஏ முகாம்.. அச்சத்தில் அதிபர்கள்.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தை சார்ந்த ஸ்வப்னா சுரேஷ் தங்க நகைக்கடத்தல் வழக்கில் சுங்க அதிகாரிகளால் முதலில் கைது செய்யப்பட்டார். இவர் அங்குள்ள அரசு தொழில்நுட்ப பிரிவு ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்ததை அடுத்து, விசாரணை சூடுபிடித்தது. 

இதன்பின்னர், பல போராட்டங்கள் நடத்தப்பட்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைக்கு சென்றது. இந்த வழக்கில் தொடர்புடைய பல அரசு அதிகாரிகளும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணை வட்டத்தில் இருக்கின்றனர். 

இந்த விவகாரத்தில் ஏற்கனவே திருச்சியில் தங்க கட்டிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் தெரியவந்த நிலையில், 5 பேர் கொண்ட குழு என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னைக்கு நேற்று விரைந்தனர். ஸ்வப்னா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் தங்க நகைக்கடை அதிபர்களிடம் இவர்கள் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai NIA Officers gold smuggling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->