சொத்துக்காக சொந்த சகோதரியை குடும்பத்தோடு திட்டமிட்டு வேரறுத்த கொடூரம்.. 3 வருட விசாரணையில் அம்பலமான உண்மை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மயிலாப்பூரை அடுத்துள்ள சித்திரைக்குளம் பகுதியை சார்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ள நிலையில், கடைகள் கட்டியும் வாடகைக்கு விட்டுள்ளனர். இவர்களின் சொத்துக்களை மீனாட்சியின் உறவினர்கள் அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். 

தர்மலிங்கம் மற்றும அவரின் மனைவி மீனாட்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தினை வழங்கிய நிலையில், தர்மலிங்கத்திற்கு மதுவிலும் - மீனாட்சிக்கு உணவிலும் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர். விஷத்தினால் தாக்கப்பட்ட இருவரும் கடந்த 2017 ஆம் வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் 13 ஆம் தேதி மீனாட்சியும் உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மயிலாப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உறவினர்களின் இறப்பில் மர்மம் இருப்பதாக மீனாட்சியின் அக்கா லதா புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் சென்றது.

சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியில் வசித்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி பெயர் மீனாட்சி. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. பூ மொத்த வியாபாரம் செய்தனர். இவர்களுக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது. கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இவர்களது சொத்துகளை அபகரிக்க மீனாட்சியின் உறவினர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள்.

பிரேத பரிசோதனையின் முடிவில் இருவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டது அம்பலமான நிலையில், இவ்வழக்கு விசாரணையில் மீனாட்சியின் தங்கை மைதிலி, அவரது கணவர் பிரவீன், மகன் சரவணன் மற்றும் தோழர் பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியாகிய நிலையில், புகார் கொடுத்த லதாவின் மீதும் காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும், மீனாட்சியின் அக்காவான லதா, தர்மலிங்கம் - மீனாட்சி தம்பதியின் சொத்துக்களை நிர்வகித்து வந்துள்ளார். இது குறித்த தீவிர விசாரணைக்கு பின்னர் கொலையை திட்டமிட்டு அரங்கேற்றியது லதா என்பது காவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து லதாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பலகட்ட நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு பின்னர் பேரதிர்ச்சி திருப்பம் இவ்வழக்கில் நடந்தாக காவல் துறையினர் மற்றும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Mylapore Husband wife Slow Poison Murder Case Police Revolves Mystery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->