சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம்?!  - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை, ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து தென்மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன், பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது,

"கடந்த இரு நாட்களுக்கு முன்பு எங்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நாடோடிகள் சிலர் மெரினா கடற்கரையில் தங்கி உள்ளனர். அவர்கள் ஒரு பூவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு போதை தரக்கூடிய ஒரு சாராயம் ஒன்றை தயாரித்து இங்கு எடுத்து வந்துள்ளனர்.

அது போதை தரக்கூடிய ஒரு தண்ணீர் என்பது தெரியவந்துள்ளது. அது சாராயம் தானா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் தற்போது சம்பவ இடத்தில் இல்லை. ஆனால் அவர்கள் புதைத்து வைத்திருந்த இந்த போதை தரக்கூடிய தண்ணீரை ஒரு வாலிபர் எடுத்து விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

சரியான நேரத்தில் போலீசார் அதனை கவனித்து, அவர் மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரண்டு லிட்டர் பாட்டில் மொத்தம் 10 பாட்டில்களை முதல் கட்டமாக கைப்பற்றப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் இருந்து வந்த நாடோடிகள் இதனை விற்பனைக்காக எடுத்து வரவில்லை. அவர்களின் சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே இதனை எடுத்து வந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai marina beach some issue today may 2022


கருத்துக் கணிப்பு

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதை நம்பலாமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதை நம்பலாமா?




Seithipunal
--> -->