10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி., சிறிது நிமிடத்தில் உடல் நீல நிறமாகி உயிரிழப்பு.! சென்னையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் மளிகை கடை ஒன்றில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த, 13 வயது சிறுமி அடுத்த சிறிது நேரத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் -காயத்ரி தம்பதி. இவர்களுக்கு 13 வயது தரணி என்ற மக்கள் இருக்கிறார். இவர் நேற்று மாலை அருகில் உள்ள மணி என்பவரின் கடைக்கு கூல்டிரிங்ஸ் வாங்க சென்று இருக்கிறார்.

'டோகிட்டோ கோலா' என்ற குளிர்பானத்தை 10 ரூபாய் கொடுத்து சிறுமி தரணி வாங்கியிருக்கிறார். மேலும், ஒரு ரஸ்னா பாக்கெட் ஒன்றையும் வாங்கி இருக்கிறார். இந்த இரண்டு குளிர்பானங்களையும் சிறுமி குடித்து உள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு சிறிது நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வாந்தியும் வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் சகோதரி அஸ்வினி தனது தாயை அழைத்து வர சென்று இருக்கிறார்.

தாய் காயத்ரி உடனடியாக வீட்டில் வந்து பார்த்தபோது, சிறுமி தரணி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை மீட்டு தாய் காயத்ரி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த சிறுமியின் உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறி இருந்ததைக் கண்டு தாய் காயத்ரி உள்ளிட்ட அனைவரும் அதிர்ந்து போயினர். இதுகுறித்து கூல்டிரிங்ஸ் வாங்கி அந்த மளிகை கடை காரரிடம் சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அவர் சரியான முறையில் பதில் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாஸ்திரிநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், சிறுமி உட்கொண்ட அந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலையும், ரஸ்னா கவர் உள்ளிட்ட அனைத்தையும்  சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சிறுமி உயிரிழந்த காரணம் என்ன என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரியவரும் என்று சாஸ்திரிநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சிறுமியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட அந்த மளிகை கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அந்த கடையில் விற்க கூடிய பொருட்கள் குறித்து சுகாதாரத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai little girl dead Mistry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->