போராட்டத்தில் குதித்த வியாபாரிகள் - சென்னையில் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிதீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில் கோயம்பேடு காய்கறி மற்றும் பழச்சந்தை மூடப்பட்டது. இதனையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவே, மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் சில்லறை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை மையங்கள் நாளை முதல் செயல்பட அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக 1600 சிறு காய்கறி கடைகள் மதுரம் 850 பழக்கடைகள் செயல்படுகிறது. சுமார் 2 ஆயிரம் வியாபாரிகள் இக்கடையில் தொழில் செய்து வரும் நிலையில், 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனால் வருமானம் பார்த்து வருகின்றனர். 

இதனால் சில்லறை விற்பனை கடைகளை மூட சிறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Koyambedu Market Small Vegetable and Fruit Sellers Protest 9 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->