#JustIN: அட்டம்ப்ட் பெயிலால் ஜெயிலுக்கு சென்றவர்கள் பெயிலில் வந்ததும் பாய்ச்சல்.. போட்டுத்தள்ளிய எதிர்தரப்பு.! - Seithipunal
Seithipunal


கொலைமுயற்சி வழக்கில் கைதாகிய நபர்கள் நிபந்தனை ஜாமினில் வெளியான நிலையில், 7 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார். 

சென்னையில் அயோத்திகுப்பம் பகுதியை சார்ந்த கிளி ராஜேஷ் மற்றும் ஜான்சன் ஆகியோர், கடந்த மாதம் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நிபந்தனை ஜாமின் அடிப்படையில் தற்போது வெளியே வந்துள்ள நிலையில், தினமும் மெரினா டி.5 காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறாக இவர்கள் இருவரும் தினமும் மெரினா காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டு செல்லும் நிலையில், இன்று காலை ஜான்சன் மற்றும் கிளி ராஜேஷ் ஆகியோர் வழக்கம்போல காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள விவேகானந்தர் இல்லம் அருகே செல்கையில் 7 பேர் கொண்ட கும்பல் இவர்களை சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பி சென்றுள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரையும் மீது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், கிளி ராஜேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியான நிலையில், ஜான்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். 

இருவரும் காவல் துறை அதிகாரிகளின் குற்றப்புள்ளிகள் பட்டியலில் முக்கிய குற்றவாளியாக இருந்து வரும் நிலையில், 7 பேர் கொண்ட கும்பல் குறித்து விசாரணை செய்கையில் அவர்கள் அயோத்திகுப்பம் பகுதியை சார்ந்த ஏழுமலை என்பவரின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஏழுமலை ஆதரவு கும்பலும் ரவுடி கும்பல் என்பதால், அவர்களை காவல் துறை துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Kili Rajesh and Jhonson Rowdy Murder Attempt Kili Rajesh Died 16 July 2021 at near Marina Police Station


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->