ஐடி வேலையா? 'நோ' 'நோ', காலியாகி வரும் ஐடி நிறுவனங்கள்.! சிதையும் சென்னை.! - Seithipunal
Seithipunal


சென்னை என்றாலே ஐடி நிறுவனங்கள் தான் பலருக்கும் நினைவிற்கு வரும். ஐடில வேலை என்றாலே நம்மில் பலரும் ஆடம்பர வாழ்க்கை அவருக்கு என்னப்பா சொர்க்கம் என்ற கமெண்டுகள் தான் இருக்கும். 

ஆனால், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஐடி நிறுவனங்கள் தற்பொழுது அழிந்து வருகின்றது என கூறினால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. 

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழைப் பொய்த்ததால் தமிழகம் முழுவதும் தண்ணிர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னை ஓ.எம். ஆர்-ல் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

இதை அடுத்து அந்நிறுவனங்கள் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதன்படி, சில நிறுவனங்கள் அடுத்த 100 நாட்களுக்கு தங்கள் ஊழியர்களை வசதிக்கேற்றார் போல வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில நிறுவனங்களோ ஊழியர்களைத் தங்கள் வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு வர சொல்லி அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற காரணங்களால், ஐடி துறை மட்டுமல்லாமல் சென்னைவாசிகள் பலர் சொந்த ஊருக்கே கிளம்பி வருகின்றனர். கடுமையான தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிரம பட வேண்டிய நிலைக்கு சென்னை வாசிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

வாந்தாரை வாழவைக்கும் சென்னை., தற்பொழுது தண்ணீர் பிரச்சனை காரணமாக காணாமல் போய் கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மையாகும். சென்னையின் நீர் நிலைகளில் கட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் இப்பொழுது அந்த காரணத்தினாலே அழிந்து போவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai IT companies may destroy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->