மழையோ மழை., வெயிலோ வெயில், சூடோ சூடு... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், " உள் கர்நாடகா முதல் கேரளா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 7 ஆம் தேதியன்று, வட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம். 

8 ஆம் தேதி பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். 

9 ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை இருப்பதால், காற்றில் இயல்பான வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை முன்னறிவிப்பாக வரும் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தரைக் காற்று வீச வாய்ப்பு இருக்கிறது என்பதால், தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரையில் வரும் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும் - குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியார், அலகாரி எஸ்டேட் பகுதியில் 8 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் 7 செண்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IMD Report 7 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->