29 ஆம் தேதி வரை தொடர் மழை.. கோடை வெயிலுக்கு இதமான ஜில் ஜில் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், " மரத்வாடா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 25 ஆம் தேதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். 

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யலாம். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 

26 ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. 

27 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதியை பொருத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

29 ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு இருப்பதால், காற்றின் இயல்பான வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IMD Announce Rain till 29 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->