எந்நேரமும் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் இல்லத்தரசிகள்! இல்லத்தரசிக்கு 14 லட்சம் வழங்க உத்தரவிட்ட நீதிபதி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், பெரியவீராணம் பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரி (39). கடந்த 2017-ம் ஆண்டு பெரியவீராணம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த புவனேஸ்வரி மீது, தனியார் பஸ் மோதியது இதில் படுகாயம் அடைந்த அவரால் நடக்க முடியவில்லை. 

இதையடுத்து தனக்கு இழப்பீடு கேட்டு புவனேஸ்வரி  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கை விசாரித்த சேலம் வாகன விபத்துக்களை விசாரிக்கும் தீர்ப்பாயம், இல்லத்தரசியான புவனேஸ்வரிக்கு மாதம் 4,500 ரூபாய் வருமானம் பெறக்கூடிய தகுதியானவர் என்று நிர்ணயம் செய்து, அதனடிப்படையில் 8.46 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்ற ஆண்டு உத்தரவிட்டது. 

இந்த இழப்பீட்டு தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் புவனேஸ்வரி மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-

மனுதாரர் புவனேஸ்வரி தனது குடும்பத்தைப் போற்றி பாதுகாத்து வரும் இல்லத்தரசி ஆவார். அவருக்கு கணவரும் குழந்தைகளும் உள்ளனர். ஸ் மோதிய விபத்தால் ஏற்பட்ட பாதிப்பால் புவனேஸ்வரியால் மற்றவர் துணை இல்லாமல் இனி தனது தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் இல்லத்தரசியின் பணி மகத்துவமானது.

நேரம் காலம் இல்லாமல் எந்நேரமும் குடும்பத்திற்காக உழைக்க கூடியவர்கள் இல்லத்தரசிகள். அதுமட்டுமல்ல, தேசத்தை கட்டிக் காக்கும் வாரிசுகளை உருவாக்கும் உன்னத பணியையும் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒப்பானவர்கள் ஒருவரும் இல்லை.

வீட்டில் மிகவும் முக்கியமான நபராக கருதப்படும் இல்லத்தரசி மறைந்துவிட்டால் அந்த குடும்பம் திக்குத்தெரியாத நிலைக்கு சென்றுவிடும். இதனால் அந்த குடும்பமே அஸ்தமனமாகிவிடும். அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் வாழ்ந்து குடும்பத்திற்காக கால நேரம் பார்க்காமல் உழைக்கும் இல்லத்தரசிகளின் பணியை மற்ற தொழிலாளர்களின் உழைப்புடன் எப்படி ஒப்பிட முடியும்? தன் நலத்தையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தினரை கவனிக்கும் இல்லத்தரசியின் பணியை எந்த தொழிலாளரின் பணியுடனும் ஒப்பிட முடியாது.

இந்த உண்மையை தீர்ப்பாயம் கவனிக்க தவறிவிட்டதுடன் தவறான கணக்கீடு அணுகுமுறையில் இல்லத்தரசிக்கு மாத ஊதியத்தை 4,500 ரூபாய்யாக நிர்ணயம் செய்துள்ளது தவறு. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு மாற்றம் செய்யப்படுகிறது. மனுதாரரின் மாத வருமானமாக ரூ.9 ஆயிரம் நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை ரூ.14 லட்சத்து 7 ஆயிரமாக உயர்த்துகிறேன். இந்த தொகையை தனியார் பஸ் காப்பீடு செய்துள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன் 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai highcourt announce 14 lakh for house wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->