தமிழகம், புதுச்சேரியில் கோடை விடுமுறை ரத்து.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஏற்படும் பாதிப்புகள் மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் இந்தியாவில் அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது மாநிலமாக இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 31 கொரோனா சோதனை ஆய்வகம் இருக்கிறது. நேற்று கொரோனாவால் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை  1,372 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் பூரண நலன்பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ள நபர்களின் எண்ணிக்கையும் 365 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு கோடைக்கால விடுமுறை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மே 2 முதல் 31 ம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court summer holidays canceled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->