மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி... செக் வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கரோனா அறிகுறி அதிகளவுடன் மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. 

இதில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசிடம் காரோனா தடுப்பு நிதிஉதவிக்கு முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசு கரோனா குறைவான பாதிப்பு உள்ள மாநிலத்திற்கு அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்தும், தமிழகத்திற்கு குறைந்தளவு தொகையை ஒதுக்கீடு செய்தும் அறிவித்தது. 

இந்த விஷயம் தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழகத்திற்கு குறைவான கரோனா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழகம் கரோனா பாதிப்பில் இரண்டாவது மாநிலமாக இருக்கும் நிலையில், குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எப்படிப்பட்டது?..

'மத்திய அரசு இது தொடர்பான பதிலை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court question indian central govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->