சிதம்பரம் நடராஜர் ஆலயம், ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்கள் பங்கேற்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா நிகழ்விற்கு பிற மாவட்டத்தை சார்ந்தவர்களையும் அனுமதி செய்ய வேண்டும் என்றும், காஞ்சிபுரத்தை சேர்ந்த விஷ்ணு தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இது குறித்த மனு நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், " சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் ஆருத்ரா தரிசனத்திற்கு பிற மாவட்டத்தை சார்ந்தவர்களையும் அனுமதி செய்யலாம். 

கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை தரிசனத்திற்கு அனுமதி செய்யலாம். பரிசோதனை சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. அது கட்டாயமும் கிடையாது. உடன் வெப்பநிலையை பரிசோதனை செய்து பக்தர்களை அனுமதிக்கலாம். 

பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணிவரை அனுமதிக்கலாம். குறிப்பிட்ட நேரங்களில் தலா 200 பக்தர்கள் வீதம், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கலாம் " என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court Order to Darisana for All Chidambaram Nadarajar Temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->