2020 விடுமுறை தினங்கள் என்னென்ன?..!! உயர்நீதிமன்ற அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்றத்திற்கான 2020 ஆம் வருடத்தின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி., பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை., தெலுங்கு புத்தாண்டு புத்தாண்டு மார்ச் 25 ஆம் தேதியன்றும்., மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 6 ஆம் தேதியன்றும்., புனித வெள்ளியான ஏப்ரல் 10 ஆம் தேதியன்று விடுமுறை விடப்படுகிறது. 

இதனைப்போன்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 14 ஆம் தேதியன்றும்., தொழிலாளர் தினமான மே மாதம் 1 ஆம் தேதியன்றும்., ரம்ஜான் பண்டிகையான 25 ஆம் தேதியன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

court, court images,

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்றும்., காந்தி ஜெயந்தியாக அக்டோபர் 2 ஆம் தேதியன்றும்., விஜயதசமியான அக்டோபர் 26 ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதியன்றும்., மிலாடி நபியான அக்டோபர் 30 ஆம் தேதியன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபஒளி பண்டிகையான நவம்பர் மாதத்தின் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதியன்றும்., கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 24 ஆம் தேதியன்று மற்றும் 25 ஆம் தேதியன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court leave days 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->