பம்பர் டூ பம்பர் 5 ஆண்டு காப்பீடு இனி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விபத்தில் சடையப்பன் என்பவர் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் விபத்து இழப்பீடு கேட்டு மனுதாக்கல் செய்யவே, ஈரோடு விபத்துகள் தீர்ப்பாயம் ரூ.14 இலட்சம் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து நியூ இந்தியன் அசூரன்ஸ் காப்பீடு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், சடையப்பன் ஓட்டுநராக பணியாற்றியதற்கு ஆதாரம் இல்லை, அவரது சம்பளம் தொடர்பான விபரங்கள் குறித்த ஆவணங்களும் இல்லை. ஆகையால், அவர்களுக்கு ரூ.1 இலட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க இயலும் என்று வாதிடுகையில் தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஈரோடு தீர்ப்பாய உத்தரவை இரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், அவர் காப்பீடு விபரங்கள் தொடர்பாக உத்தரவிட்டுள்ளார். இன்றைய விசாரணையில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், " செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும். 

காப்பீடு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க தமிழக போக்குவரத்துத் துறைக்கு தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. புதிய வாகனம் எவ்வாறு இயங்கும் என்பதை காட்டும் ஆர்வத்தை, காப்பீடு நடைமுறைகளில் பலரும் காண்பிப்பதில்லை. 

காப்பீடு தொடர்பான விவரங்களை விற்பனையாளர்கள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை. ஆகையால், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பம்பர் டூ பம்பர் 5 வருட காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் " என்று தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court Judgement about Dharmapuri Hogenakkal Accident Issue about Insurance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->