100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் படம் பார்க்க வரும் மக்கள் 100 விழுக்காடு இருக்கையிலும் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் அனுமதி வழங்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கையை வைத்து வந்தனர். முதலில் திரையரங்கை திறக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, 50 விழுக்காடு இருக்கைகளில் மக்கள் அமர்ந்து திரைப்படங்களை பார்க்க அனுமதி வழங்கியது. 

நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, திரையரங்கில் 100 விழுக்காடு இருக்கைகளில் மக்கள் அமர்ந்து திரைப்படத்தை பார்க்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். நடிகர் சிம்புவும் அறிக்கை வாயிலாக இக்கோரிக்கையை வைத்திருந்த நிலையில், தமிழக அரசு திரையரங்கில் 100 விழுக்காடு இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில், இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் உருக்கமான கடிதத்தை வெளியிட, மத்திய உள்துறை அமைச்சகமும் தமிழக அரசை அறிவுறுத்தியது. திரையரங்கில் 100 விழுக்காடு இருக்கையில் அமர்ந்து படம் பார்க்க அனுமதி கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவே, " திரையரங்கில் 100 விழுக்காடு இருக்கையில் அமர்ந்து திரைப்படம் பார்க்க அனுமதி வழங்க முடியாது " என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court Cancel TN Govt Order Theater Seat Capacity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->