#Breaking: தமிழக அரசின் சட்டத்தை இரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.. பரபரப்பு தீர்ப்பால் அதிர்ச்சியில் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய சட்டத்தை உரிய வரைமுறைக்கு பின்னர் கொண்டு வரவும் அறிவுறுத்தியுள்ளது.

இணையதளங்களில் விளையாடப்படும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களால் தமிழகத்தில் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து வந்த துயரம் அரங்கேறவே, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் முதல் ஆளாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

வெற்றி., வெற்றி.! தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து, ஆலோசனை வழங்கிய  மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal

இதையும் படிங்க: தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அவசர சட்டத்திற்கு மருத்துவர் இராமதாஸ் பாராட்டு.! (21/11/2020)

இதனையடுத்து, தொடர்ந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க, தமிழகத்தின் அன்றைய எதிர்க்கட்சி தலைவர், இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, தமிழகத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, தொடர்ந்து பலர் தற்கொலை செய்ய தொடங்கியதால் அன்றைய முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து 2020 ஆம் வருடம் சட்டத்தை இயற்றினார். 

BREAKING: இன்று தமிழக முதல்வர் தாக்கல் செய்ய போகும் மிக முக்கிய சட்ட  மசோதா.! எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறுவது உறுதி.! - Seithipunal

இந்த சட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோரிக்கை வைக்கவே, மக்களின் நலன் கருதி இதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

திருட்டு பணத்தில் ஆன்லைன் ரம்மி.. கொள்ளையர்களின் பகீர் வாக்குமூலம்.!! -  Seithipunal

அரசு தரப்பு வாதங்களும், நிறுவன தரப்பு வாதங்களும் விசாரணை செய்து முடிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டத்தினை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டம் இரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது. புதிய சட்டத்தை கொண்டு வரவும் தமிழக அரசுக்கு தடை ஏதும் கிடையாது. தமிழக அரசு இயற்றிய சட்டம் முழுமையாக பரிசீலனை செய்யப்படவில்லை. முழுமையாக இது தொடர்பாக பரிசீலனை செய்து புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துகொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மேற்கோள் காண்பித்து வாதாடிய எதிர்தரப்பு தமிழக அரசின் சட்டத்திற்கு தடை கேட்டு வாதத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court Cancel Against Law of TN Govt Online Rummy Ban 3 August 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->