நடிகை காணாமல் போனால்தான் காவல் துறை பணியை செய்யுமா?.! உச்சகட்ட கோபத்துடன் நீதிபதிகள்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள 19 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில்., மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனால் பதறிய பெண்ணின் தாயார் சிறுமியை அங்குள்ள அவருக்கு தெரிந்த இடமெல்லாம் தேடி அலைந்த நிலையில்., சிறுமி கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் அலட்சியமாக பதில் கூறி கண்டறிந்து தருவதாக கூறியதாக தெரியவருகிறது. இதனையடுத்து இது குறித்து பெண்ணின் தாயார் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்த நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகளின் முன்னிலையில் வந்தது. 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஆவேசத்துடன் "திரைத்துறை நடிகைகள் காணாமல் போனால் மட்டும்தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? அப்பாவி மக்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று கேள்விகளை முன் வைத்தனர். 

இதுமட்டுமல்லாது இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை வரும் திங்கள் கிழமையன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court ask selam police for girl missing case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->