கைதிகளை பெண்கள் திருமணம் செய்யும் விவகாரம்... கையை விரித்த பெண்கள் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


பெண்கள் சுய விருப்பத்தின் பேரில்தான் தண்டனை கைதிகளை திருமணம் செய்கிறார்களா...? என்பதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என தேசிய மகளிர் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பு செயலாளர் பிரதீப் குமார் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்பது ஆணையத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் தண்டனை கைதியை திருமணம் முடிக்கும் பெண்ணிடம் ஒப்புதல் பெறப்பட்டதா அல்லது குடும்பத்தினரின் நிர்ப்பந்தம் காரணமாக திருமணம் நடத்தப்படுகிறதா என விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High court ask about Jail Prisoners Marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->