#சற்றுமுன்: நீட் விவகாரம்., சூர்யா மீது நடவடிக்கை?! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
chennai hc new order to surya neet issue
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா நேற்று ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில், "நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்விமுறையை சட்டமாக கொண்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத உத்தரவிடுகிறது." என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகியது.
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றத்தை நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, விசாரணைக்கு பின் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
chennai hc new order to surya neet issue