ஏன் மரத்தை வெட்டுகிறீர்கள்? ஆட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி! - Seithipunal
Seithipunal


மரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் தொழில்நுட்பம் இருக்கும்போது, ஏன் மரத்தை வெட்டுகிறீர்கள் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி திருவானைக்கோவில் முதல் சுங்கச்சாவடிச்சாலை வரை, சாலை விரிவாக்க பணிக்காக சாலை இருபுறமும் இருக்கும் மரங்களை வெட்டப்படுவதை தடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறைத்த அந்த மனுவில், "இந்த சாலை ஏற்கனவே போதுமான அளவுக்கு இருக்கிறது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும் கிடையாது. இருப்பினும் சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, "மரங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் தொழில்நுட்பம் இருக்கும்போது, ஏன் இப்படி மரத்தை வெட்டுகிறீர்கள்?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc division say Dont cut trees


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->