நான்கு நாட்களுக்கு வானிலை இப்படித்தான்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இருந்து வரும் 24 மணிநேரத்துடன்  பருவமழையானது முற்றிலுமாக விலகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்., தமிழக்தில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்தார். 

மேலும்., தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவும் என்றும்., பெரும்பாலான மாவட்டங்களில் காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

chennai rain,

இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட இரண்டு விழுக்காடு அதிகளவு பெய்துள்ள நிலையில்., தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் மழையளவு டிசம்பர் மாதம் வரை 16 விழுக்காடு குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதிகபட்சமாக நீலகிரியில் 64 விழுக்காடு அளவு மழையும்., இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலியில் 45 விழுக்காடு மழையும்., தூத்துக்குடியில் 31 விழுக்காடு மழையும்., கோயம்புத்தூரில் 29 விழுக்காடு மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai have rain announce by weather office


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->