அரசு அதிகாரியிடம் வங்கி பெயரில் இலட்சக்கணக்கில் ஆட்டைய போட்ட சோகம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள வீராபுரம் பகுதியை சார்ந்தவர் புஷ்பராஜ் (வயது 64). இவர் ஓய்வு பெற்ற பாதுகாப்புத்துறை ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 4 ஆம் தேதி இவரது அலைபேசி எண்ணிற்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளனர். 

மேலும், வங்கியில் இருந்து ஆறு இலக்க ஓ.டி.பி எண் வந்துள்ளது என்றும், இதனை பார்த்து கூறுமாறும் தெரிவித்துள்ளனர். வங்கியில் இருந்துதான் பேசுகிறீர்கள் என்று எண்ணிய புஷ்பராஜும், சுமார் 8 முறை வந்திருந்த ஓ.டி.பி எண்களை தெரிவித்துள்ளார். 

இதன்பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திற்குள்ளாகவே ரூ.4.80 இலட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பராஜ் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகவே, பணம் மோசடி செய்துள்ளதை அறிந்துள்ளார். 

இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக ஆவடி காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது போன்று யாரும் வங்கியில் இருந்து பேசுகிறோம் என்றால் ஓ.டி.பி எண்ணை பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Fraud robbery police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->