மாடலிங் பெண்களிடம் திரைத்துறை ஆசைகாட்டி விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியை சார்ந்தவர் சூரஜ் மல்ஹோத்ரா. இவரது நண்பர் ராகுல். இவர்கள் இருவரும் வடமாநிலத்தை சார்ந்த பெண்களிடம், திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக தெரிவித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாத்தியம் செய்து வந்துள்ளனர். 

மும்பை மற்றும் டெல்லி பகுதியை சார்ந்த, ஏழ்மையான சூழலில் மாடலிங் செய்து வந்த பெண்களை ஏமாற்றி ஆந்திரா, சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு அழைத்து வந்து, சினிமா புள்ளிகளிடம் வாய்ப்பு பெற்று தருவதாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிக்கு இரண்டு பெண்களை அழைத்து வந்தவர்கள், திரைத்துறை பிரமுகர்களுக்கு புரோக்கராக செயல்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் துறையினர் நட்சத்திர விடுதியை சோதனை செய்துள்ளனர். 

இதன்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த இரண்டு பெண்களை காவல் துறையினர் மீட்ட நிலையில், திருமுல்லைவாயல் பகுதியை சார்ந்த செந்தில், சரவணன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். தப்பியோடிய சூரஜ் மற்றும் ராகுலை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Forced Prostitution North Indian girls Rescued by Police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->