எழும்பூர் இரயில் நிலையத்தில் சோகம்... கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை...! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்த முதியவர், கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் வேகமாக ஏறியுள்ளார். இதனைக்கண்ட பயணிகள், எங்கே செல்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியும், அதனை காதில் வாங்காமல் விரைந்து சென்றார். 

கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற முதியவர், அங்கிருந்து தரையை பார்த்த நிலையில், இதனைக்கண்டு பயணிகள் பதறிப்போய் அவரை கீழே இறங்கி வரக்கூறி கூச்சலிட்டனர். அங்கிருந்த இரயில்வே காவல் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து, முதியவரை கீழே இறங்கி வரக்கூறி கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் முதியவர் திடீரென கட்டிடத்தின் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த எழும்பூர் இரயில்வே காவல் துறையினர், முதியவரின் உடலை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக அங்கிருந்த பயணிகள் தெரிவிக்கையில், " முதியவர் மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் போதே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம், அவர்களின் அலட்சியத்தால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் " என்று தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Egmore Railway Station Old Man Suicide and Died Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->