சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கு: சூடான், நைஜீரியா இளைஞர்கள் 29 பேர் கைது!
சே chennai drugs smuggling case
சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், நகரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கக் காவல்துறைத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வானகரம் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் நடத்திய சோதனையில் முக்கியக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2 வெளிநாட்டவர்கள் கைது
வானகரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
நடவடிக்கை
இந்தக் கைது நடவடிக்கையின் மூலம், சென்னையில் இதுவரை போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி கைதான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கத் தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனச் சென்னை மாநகரக் காவல்துறை எச்சரித்துள்ளது.
English Summary
சே chennai drugs smuggling case