#தீபாவளி || இன்று முதல் தொடங்கியது சென்னையில்.! சென்னை வாசிகளே ரெடியா?!  - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஆடை விற்பனை, பட்டாசு விற்பனை, இனிப்பு வகைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. கொரனோ பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இந்த தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது இந்த தீபாவளி பண்டிகையில், சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பண்டிகையை கொண்டாட மத்திய -மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகவும், காற்று மாசு காரணமாக இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி அன்று காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு இன்று விற்பனை தொடங்கியுள்ளது. இந்த வருட தீபாவளிக்காக சென்னை தீவுத்திடலில் 40 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பை போல கூட்ட நெரிசல் இல்லாமல் இருப்பதற்காக, சமூக இடைவெளியை பின்பற்றி பட்டாசு வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI crackers sale start


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->