ஜெயலலிதாவின் இல்லம் தொடர்பான வழக்கு.... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் வேதா இல்லாததை நினைவு இல்லமாக மாற்றுவதை விட முதல்வர் பயன்படுத்தும் அதிகாரபூர்வ இல்லமாக மாற்றலாம். 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் அவரது சொத்துக்களை நிர்வாகம் செய்ய தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், வருமான வரித்துறையிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, தீபா மற்றும் தீபக்கை வழக்கில் சேர்த்து விசாரணை செய்து வந்தனர். 

ரூ.913 கோடிக்கு ஏற்கனவே சொத்துக்கள் இருப்பதாக மதிப்பீடு செய்திருந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசாக சேர்த்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றம் செய்துள்ள பரிந்துரை குறித்து தமிழக அரசு 8 வாரத்தில் பதில் தர வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் வேதா இல்லாததை நினைவு இல்லமாக மாற்றுவதை விட முதல்வர் பயன்படுத்தும் அதிகாரபூர்வ இல்லமாக மாற்றலாம் என்றும், அரசு இந்த சொத்துக்களை பராமரிக்க அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai court judgement about Jayalalidha home case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->