அஜித், கமலுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவனின் குடும்பத்தில் பெரும் சோகம்..! - Seithipunal
Seithipunal


வலிமை மற்றும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரத்தின் தாயார் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லாமல் அவரது குடும்பம் பரிதவித்த சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முபாரக். முபாரக் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த நிலையில், இவரது மனைவி யாஸ்மின் (வயது 34). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஆலம் என்ற 10 வயது மகனும் உள்ளனர். திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வரும் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஆலம், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 
2 திரைப்படத்தில் கமல் ஹாசனின் பேரனாக நடித்துள்ளார். 

முன்னதாகவே நடிகர் அஜித்குமாரின் வலிமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். முபாரக்கிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக விபத்து ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த நிலையில், கொரோனாவின் முதல் அலைபரவலில் இவர்களின் குடும்பம் பெரும் பொருளாதார ரீதியான இழப்பை சந்தித்துள்ளது. இரண்டாவது அலை பரவலில் குழந்தை நட்சத்திரமான ஆலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

அதனைத்தொடர்ந்து, அவரின் தாய், தந்தை, சகோதரி என குடும்பத்திற்கு மொத்தமாக கொரோனா உறுதியானது. ஆலமீன் தாயான யாஸ்மின் 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு கொரோனா தீவிரமடைந்த நிலையில், வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவரின் முயற்சியால், தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் படுக்கையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த ஆலமீன் குடும்பத்தினர் பல இலட்சம் செலவழிக்க முடியாத சூழ்நிலையில், பெங்களூரை சார்ந்த நவீன் என்பவர் ஆலம் வெப் சீரிஸில் நடித்ததன் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அவர் ஆலமீன் குடும்பத்தினருக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்து வந்துள்ளார். மேலும், யாஸ்மின் கர்ப்பிணி பெண் உணவுக்காக போராடுவது போன்ற ஓவியத்தை தயார் செய்த நிலையில், அதனை வைத்து இணையத்தில் நிதிஉதவி கேட்டு கோரிக்கை வைத்தனர். 

இதன்மூலமாக ரூ.9 இலட்சம் பணம் கிடைத்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பணம் செலுத்தி யாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை உயிருடன் காப்பாற்றி இருக்கின்றனர். ஆனால், யாஸ்மின் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதியாக, மனைவியின் உடலை கூட அடக்கம் செய்ய பணம் இல்லாமல், மீண்டும் தெரிந்தவர்களிடம் உதவி கேட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

தாய் இறந்த செய்தி கூட தெரியாமல் ஆலமும், அவரது சகோதரியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஆலம் நடித்ததற்கான ரூ.3 இலட்சம் சம்பள நிலுவைத் தொகையாக இந்தியன் 2 மற்றும் வலிமை பட நிறுவனங்கள் வழங்கிட வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Childhood Actor Alam Mother died Corona 20 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->