சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுக பா.ஜ.க பிரமுகர் கைது..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 16 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த சிறுமி ஆவடியில் இருக்கும் தனியார் பள்ளியில், பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த நான்காம் தேதியன்று சிறுமியின் பெற்றோர் பணிக்கு சென்றனர். அந்த சமயத்தில், வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருக்கவே, இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளுமேடு செங்குன்றம் ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன், சிறுமியின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளான். 

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளான். சிறுமி தனது பெற்றோர் வந்ததும், விசயத்தை கூறி கதறி அழுதுள்ளார். 

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் தலைமறைவாக இருந்த சீனிவாசனை கைது செய்த நிலையில், சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai child girl sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->