குக்கூ,குக்கூ கொரோனா வைரஸ் வெர்சன்.! சென்னை காவல்துறை இளம்பென்களின் அசத்தல் நடன காட்சி.! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனால், பல்வேறு பிரபலங்களும் இதுகுறித்த விழிப்புணர்வுக்காக வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர்கள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாடகி தீயின் குக்குகுக்கூ பாடல் மிகவும் பிரபலமானது. முன்னதாக கேரள காவல்துறையினர் இந்த பாடலை பயன்படுத்தி கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது சென்னையிலும் இது நடந்துள்ளது. இளம் பெண் காவலர்கள் காக்கி உடை, முக கவசம் அணிந்து நடனம் ஆட அவர்களுக்குப் பின்னால் கருப்பு உடையில் மற்றொரு பெண் முக கவசம் அணியாமல் இந்த நடனத்தில் இணைந்தார். 

கொரோனா வைரஸ் பிடியில் கருப்பு உடை பெண் காவலர் விடுவது போல தத்ரூபமாக நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai central police women Dance video viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->