முற்றிலும் முடங்கப்போகும் சென்னை! நீதி கேட்டுக்கும் போராட்டம்! - Seithipunal
Seithipunal


கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் இரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட புகைப்படமும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் சென்னை போலீசார் தன்னை அவதூறாக பேசியதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் ஒரு காணொளியை அவர் வெளியிட்டு இருந்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

இதனை அடுத்து விசாரணை செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஓட்டுநர் ராஜேஷ். இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். 

இவர் கடந்த 25-ம் தேதியன்று அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே ராஜேஷ் காருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த போது, போக்குவரத்து காவலர்கள் அவரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளதாக தெரிகிறது.



இதனால் மனமுடிந்த அவர் மறைமலைநகர் ரயில் தண்டவாளத்தில் தன தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் அளித்துள்ள காணொளியில் பேசியவை, பொதுமக்கள் தவறு செய்தால், அடித்து, சிறையில் அடைக்கிறீர்கள். போலீஸ் தவறு செய்தால், என்ன செய்வது? என் சாவுக்கு, சென்னை போலீஸ் தான் காரணம், இது போன்ற காவல்துறையினர் இருக்கும் வரை, மாதத்திற்கு ஒரு டிரைவர் செத்துக் கொண்டு தான் இருப்பான். என்னுடன், சாவு கடைசியாக இருக்க வேண்டும் என வீடியோவில், ராஜேஷ் பேசியுள்ளார்.

இந்நிலையில், வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் காவலர்கள் திட்டியதால் கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து வேலைநிறுத்தம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai call taxi drives protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->