கொள்ளைக்கு திட்டம்போட்டுக்கொடுத்த பக்கத்து வீட்டான்.. அரங்கேறிய கொடூர கொலை.. கைதி பரபரப்பு வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற நிலையில், பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த கும்பல் காவல்துறையில் சிக்கியுள்ளது. 

சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெயந்தி என்ற பெண்ணும், அவரது மகள் மோனிகாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதன் போது வீட்டிற்குள் புகுந்த இரண்டு பேர், மோனிகாவை கட்டையால் தாக்கி விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயற்சி செய்துள்ளனர். 

மோனிகாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஜெயந்தியின் உடல் முழுவதும் 41 இடங்களில் குத்தி கொலை செய்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெற்ற 4 சவரன் நகை திருட்டு தொடர்பாக, புளியந்தோப்பு பகுதியைச் சார்ந்த வெள்ளை அந்தோணி மற்றும் அவனது கூட்டாளி பாலாஜி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் விசாரிக்கையில், அமைந்தகரையில் நடைபெற்ற கொலையை இவர்கள் செய்தது தெரியவந்துள்ளது. 

மேலும், விசாரணையில் கொலையான ஜெயந்தி இருக்கும் பகுதியில் செல்லப்பா என்பவன் தங்கியிருந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், செல்லப்பா ஜெயந்தியின் மாமியாரான 80 வயது மூதாட்டியிடம் நகைகள் இருப்பதை அறிந்துள்ளான். 

இதனையடுத்து மூதாட்டியிடம் நகை பறிக்க திட்டம் போட்டு செல்லப்பா கொடுத்த நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி வெளியில் சென்று விட வீட்டிற்குள் இருந்த ஜெயந்தியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அந்தோணி, பாலாஜி, செல்லப்பா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Amaindakarai Robbery and Murder Police Arrest Criminals 27 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->