சந்தேகத்திற்கு இடமான வகையில் பெட்டிகள்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கிலோ கணக்கில் கடத்தப்பட்டது அம்பலம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, துபாய்க்கு சிறப்பு விமானமானது புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பெருமளவு கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து விமானம் புறப்பட்டு செல்ல தடை விதித்த நீதிபதிகள், அதிகாரிகளுடன் சோதனை மேற்கொண்டனர். அப்போது துப்பாக்கி செல்ல இருந்த 2 அட்டை பெட்டிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளது. 

இதனை விமானத்தில் இருந்து இறக்கி குடியுரிமை பகுதியில் வைத்து மேற்கொண்ட சோதனையில் சுறா துடுப்பு இருந்துள்ளது. இதனையடுத்து இதில் அச்சிடப்பட்ட முகவரியின் அடிப்படையில் சென்னையை சார்ந்த சதக் துல்லா (வயது 52), திருச்சியை சார்ந்த அப்பாஸ் (வயது 29) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைலயில் சுறா துடுப்புகளை துபாய்க்கு கடத்தி செல்ல முயற்சி செய்ததும், ரூ.17 இலட்சம் மதிப்புள்ள 23 கிலோ சுறா துடுப்பு கடத்தப்பட்டது அம்பலமானது. சுறாவை வேட்டையாடி அதில் இருந்து பெறப்படும் சுறா துடுப்புகள் சீனாவில் சூப் செய்யவும், துபாய் போன்ற நாடுகளில் சாப்பிடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

காலப்போக்கில் சுறாவின் துடுப்புகளை பெற அதிகளவு சுறாக்கள் வேட்டையாடப்பட்டு வந்த நிலையில், சுறா துடுப்புகள் மற்றும் சுறா வேட்டையாடுதலுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னையில் சுறா துடுப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airport officials discover and stop smuggling Shark paddle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->